தலைப்பு: வலைதள சமூக ஊடகங்களின் வாயிலாக உயர்கல்வியின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு

சிறப்பு விருந்தினர்: திரு.எழிலரசு, உதவிப்பேராசிரியர்,  (GRT Institute of Engineering and Technology)

நாள்: 28.06.2021

கிழமைதிங்கள் கிழமை

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், தமிழ்த்துறை(EFL) சார்பாக 11, 12 பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கருக்கான இணையவழிக் கருத்தரங்கம் 28.06.2021 அன்று   சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு.எழிலரசு, உதவிப்பேராசிரியர்,  (GRT Institute of Engineering and Technology) அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதல்வர் முனைவர்.சி.சுந்தர், துணைமுதல்வர் என்.அசோகன், துணை முதல்வர் ஜெ.திலீபன், மற்றும் துறைத்தலைவர் முனைவர் வை.ரமா அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. தமிழ்த்துறை (EFL) தலைவர் முனைவர் வை.ரமா அவர்கள் தலைமையுரை வழங்கி நிகழ்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

இணையவழியில் நடைப்பெற்ற உரையரங்க நிகழ்ச்சிக்கு 129 பேர் ஆர்வமுடன் பதிவு செய்தனர். நிகழ்ச்சியில் 100 பேர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:

திருமதி .ஜெயபார்வதிதமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்.

திரு பெ.இளங்கோ, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்.