பட்டிமன்றம்நிகழ்ச்சி அறிக்கை

தலைப்பு: திரைப்படங்கள் சமூகத்திற்கு வழிகாட்டுகின்றனவா? பழி கூட்டுகின்றனவா?

நாள்: 06.09.2021

எஸ்.ஆர்.எம் .அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம். அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,(S & H), இராமாபுரம் . தமிழ்த்துறை (EFL), சார்பாக 06.09.2021- திங்கட்கிழமை அன்று ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, திரைப்படங்கள்சமூகத்திற்கு வழிகாட்டுகின்றனவா? பழிகூட்டுகின்றனவா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் மையநூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழா கல்லூரி முதல்வர் சி.சுந்தர் அவர்கள் அனுமதியுடனும், துணை முதல்வர் முனைவர் ஜெ.திலீபன், துணைமுதல்வர் முனைவர் என். அசோகன் மற்றும் துறைத்தலைவர் முனைவர் வை.ரமா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

பட்டிமன்ற நடுவராக முனைவர் ஆ.இரா.பாரதராஜா  நெறிப்படுத்தினார். திரைப்படங்கள் பழி கூட்டுகின்றன! என்ற அணியில், முனைவர் இரா.அகஸ்தியர், முனைவர் த.ஸ்ரீதேவி, முனைவர் P.ஆர்த்தி , பேரா V. தேவி – ஆகியோரும்.

திரைப்படங்கள் வழி காட்டுகின்றன! என்ற தலைப்பில் முனைவர் க.இமானுவேல், முனைவர் R.பார்த்திபன்,  பேரா.அ.ந.அம்ரீன்பாத்தீமா, பேரா.ஜெ.சதீஷ் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.  செல்வி.ரா.இ . ஐஸ்வர்யா l B.Com  ஆசிரியர் தின வாழ்த்துக் கவிதை வழங்கினார். உதவிப்பேராசிரியர்,  வ.ஜெயபார்வதி  நன்றி நவின்றார். நிகழ்ச்சியை மாணவிகள் சு.வர்ஷினி, அ.அனுப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். விடுதலை வைரவிழா (15-08-2021 இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற N.S.S.மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர்கள்,  மாணவர்கள் பங்களிப்புடன் விழா இனிதே நிறைவுற்றது. நன்றி

 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

முனைவர் .இரா. பாரதராஜா