உரையரங்கம் – நிகழ்ச்சி அறிக்கை

தலைப்பு:  அணு விஞ்ஞானி அப்துல்கலாம்

நாள்: 18.10.2021

சிறப்பு விருந்தினர்: விஞ்ஞானி நெல்லை சு.முத்து (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் – ISRO)

எஸ்.ஆர்.எம் .அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம். அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம்  S.R.M. N.S.S,  சார்பாக 18.10.2021-திங்கட்கிழமை அன்று மாலை  -02-00-மணிக்கு ,  டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அவர்களின் 90- ஆம் பிறந்த நாள் நிகழ்ச்சி சிறப்பாக  நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர்  Dr சி.சுந்தர்அவர்கள் தலைமை ஏற்று, S.R.M-N.S.S- செயல்பாடுகளைப் பாராட்டியும், Dr கலாம் அவர்களின் ஆளுமைப் பண்புகளையும், அவருடைய  அறிவியல் ஆசான் Dr சதீஷ் தவான்  உயர்பண்புகளையும், மாணவர்கள்  பின்பற்றி வாழவேண்டிய உயர்ந்த, நற்கருத்துகளையும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் இஸ்ரோ  விஞ்ஞானி நெல்லை சு.முத்து அவர்கள் Drகலாம் அவர்களின் வாழ்வியல் வரலாற்றை – பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சிறப்பான நிகழ்வுகளை அரிய படக்காட்சிகளுடன் விளக்கினார். ஏவுகணைகள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்தார். இவை யாவும் மாணவர்களுக்கும் ஏனையோர்க்கும் பயனுள்ளதாக அமைந்தன. பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமாகக் கலந்து கொண்டனர். முனைவர்ஆ.இரா.பாரதராஜா N.S.S, வரவேற்புரையும்  நன்றியுரையும் வழங்கினர்.

உதவிப் பேராசிரியர் பெ.இளங்கோ(EFL) தொழில்நுட்ப  உதவி புரிந்தார். செல்வி R.I.ஐஸ்வர்யா l.B.Com கவிதை வாசித்தார்.  மாணவர்  வெங்கட கிருஷ்ணன் , lll -B.Com,  மாணவி J.S.பத்மப்ரியா l-B.Com- தொகுப்புரை வழங்கினர்.  விழா இனிதே நிறைவுற்றது. *நன்றி !

 முனைவர் ஆ.இரா. பாரதராஜா

(நிகழ்ச்சி N.S.S ஒருங்கிணைப்பாளர்.)