இலக்கியப்போட்டிகள் 2022 – நிகழ்ச்சி அறிக்கை

(பேச்சு, கவிதை, ஓவியம், சிறுகதை)

பங்கேற்பாளர்கள்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம். அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், தமிழ்த்துறை(EFL) சார்பாக பேச்சு, கவிதை, ஓவியம், சிறுகதைப் போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்றன.  இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் சி.சுந்தர் அவர்கள் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் முனைவர் ஜெ.திலீபன்(நிர்வாகம்), துணை முதல்வர் முனைவர் என்.அசோகன் (கல்வியியல்), துறைத்தலைவர் முனைவர் வை.ரமா ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

இணையம் வழியாக (ZOOM LINK) 23.02.2022 அன்று கவிதைப்போட்டியும் 24.02.2022  அன்று பேச்சுப்போட்டியும் சிறப்பாக நடைப்பெற்றன. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

பேச்சுப்போட்டியில் 45 பேரும், கவிதைப்போட்டியில் 40 பேரும், ஓவியப்போட்டியில் 110 பேரும், சிறுகதையில் 64 பேரும் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர். இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

  1. ஓவியப்போட்டி – வ.ஜெயபார்வதி, உதவிப்பேராசிரியர்
  2. பேச்சுப்போட்டி – பெ.இளங்கோ, உதவிப் பேராசிரியர்
  3. கவிதைப்போட்டி –  ஆ.இரா.பாரதராஜா, உதவிப்பேராசிரியர்
  4. சிறுகதப்போட்டி – எஸ்.காமேஸ்வரி, உதவிப்பேராசிரியர்