+1,+2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் முறை மற்றும் உயர்கல்வி வேலைவாய்ப்புகள் பற்றிய வழிகாட்டு நிகழ்ச்சி

நாள்: 14.03.2022 – 19.03.2022

சிறப்பு விருந்தினர்: எஸ்.ஆர்.எம் பேராசிரியர்கள், அசோக்நகர் வேளாங்கண்ணி பள்ளியின் ஆசிரியர்கள்

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்.  அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், நாட்டு நலப்பணித்திட்டம்(N.S.S) சார்பாக கடந்த 14-03-2022 முதல் 19-03-2022 – வரை +1, +2  படிக்கும் மாணவர்களுக்கான  பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் முறை மற்றும் உயர்கல்வி –வேலைவாய்ப்புகள் பற்றிய வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக 19.03.2022-சனிக் கிழமை  அன்றுகாலை  10-00-மணிக்கு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இராமாபுரம் SRM மற்றும் திருச்சி வளாகங்களின் தலைமை இயக்குநர் டாக்டர் என்.சேதுராமன் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி, பரிசுகள் அளித்துப் பாராட்டினார். SRM – S&H முதன்மையர் முனைவர் சி.சுந்தர் அவர்கள் முன்னிலை ஏற்று வேளாங்கண்ணி பள்ளி மாணவர்களுக்கு, வாழ்த்துரையும் உயர்கல்வி பெறுவதற்கான உத்திகளையும் சிறப்பாக எடுத்துரைத்தார். மேலும், +1, +2 மாணவர்களுக்குக் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியில் பங்குபெற்று உரையாற்றிய சென்னை அசோக்நகர் வேளாங்கண்ணி பள்ளியின்  ஆசிரியர்கள்  மற்றும் SRM -நிறுவனப் பேராசிரியர்களையும் மாணவர்களையும் S.R.M-N.S.S செயல்பாடுகளையும் பாராட்டிப் பேசினார்.

வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் திருமதி ஜெ.பிரிசில்லா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மகிழ்ச்சியும் SRM நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவித்தார். விழாவில் எஸ்.ஆர்.எம்(S&H), இராமாபுரம், துணை முதல்வர்கள் முனைவர் ஜெ.திலீபன், முனைவர் என்.அசோகன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் வேளாங்கண்ணி பள்ளி மாணவர்கள் 150-பேருக்கு மேல் கலந்து கொண்டனர். பொது அறிவுத் தேர்வில் பங்கேற்ற 220 -மாணவர்களுள்  நான்கு பேர் தேர்வு செய்யப்பெற்று பரிசுத்தொகையாக ரூ5000 வழங்கப்பெற்றது.  நிகழ்ச்சியை Dr.ஜெயச்சந்திரன் ஒருங்கிணைத்தார்.

உரை வழங்கிய ஆசிரியர்கள் கௌரவிக்கப்படடனர். N.S.S-ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமாகக் கலந்துகொண்டனர் முனைவர்ஆ.இரா.பாரதராஜா N.S.S, வரவேற்புரையும், பேராசிரியர் A.விக்னேஷ்( B.Sc C.S)நன்றியுரையும் வழங்கினர். உதவிப் பேராசிரியர்கள் D.சரவணன் (NSS), பெ.இளங்கோ (தமிழ்த்துறை) ஆகியோர் தொழில்நுட்ப உதவி புரிந்தனர். மாணவிகள் A.அனுப்பிரியா, S.கிருத்திகா, V.லோகிதா  ஆகியோர் தொகுப்புரை வழங்கினர். விழா இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

முனைவர் ஆ.இரா.பாரதராஜா (S.R.M.N.S.S)