“பறவைகளும் சுற்றுச்சூழலும்” என்னும் பொருண்மையில், 05-06-2024 அன்று, மாதாந்திர கருத்தரங்கத்தினை, தமிழ் மன்றம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், இராமாபுரம் நிகழ்த்தியது. இதில், பறவைகள் ஆராய்ச்சியாளர் முனைவர் வெ. கிருபா நந்தினி அவர்கள் பறவைகள் எவ்வாறு இந்த மனித சூழலுடன் இணைந்து வாழ்கிறது என்றும் மனிதன் அந்த பறவைகளின் வாழ்வியலை எவ்வாறு மாற்றுகின்றான் என்றும் பல நேரடி சான்றுகளுடன் விளக்கினார்.