வணக்கம்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம், ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறையின் தமிழ்ப் பிரிவு சார்பாக, “தற்கால இலக்கியங்களும் மனிதநேயமும்” என்ற தலைப்பில் ’கருத்தரங்கம் ‘   10.09.2024  செவ்வாய் அன்று BLOCK V,  AV அரங்கில் நடைபெற்றது.

நிகழ்விற்கு அனைவரையும் வரவேற்று தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் க.  சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்…

இந்நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியரும் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளின் துறையின் தலைவருமான முனைவர் த.ஸ்ரீதேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்வின் சிற‌ப்பு விருந்தினர் ஜேப்பியார் பல்கலைக்கழகத்தின்  தமிழ்த்துறைத்  தலைவர் ம‌ற்று‌ம் இணைப் பேராசிரியர் முனைவர் பூ. மு.  அன்புசிவா அவர்கள்

தற்காலக் கவிதைகள் குறித்த சிறந்த பதிவு களை எடுத்துரைத்து அருமையானதொரு

சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் மொழித்துறைப் பேராசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிறைவாக தமிழ் உதவிப் பேராசிரியர் முனைவர் ப. சாந்தி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இக்கருத்தரங்க நிகழ்வினை தமிழ் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் க. சித்ரா மற்றும் முனைவர் ப. சாந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்..

நன்றி.