எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், சென்னை-89.
அனைவருக்கும் வணக்கம்
● ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் துறை (தமிழ்ப்பிரிவு) சார்பாகச் சிறப்பு கருத்தரங்க நிகழ்வு இன்று நாள் : 12/12/2024 புதன்கிழமை காலை 11.00 – 01.00 PM மணி அளவில் முதன்மையர் அவர்களின் தலைமையில்,துணை முதல்வரின் வாழ்த்துதலோடு, நடைபெற்றது.
● நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு. நாகம்மாள் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
● ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளின் துறைத்தலைவர் முனைவர் த.ஸ்ரீதேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்
● தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் கோ. கணேஷ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
● நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெ. நளினி அவர்கள் சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரை வழங்கினார்.
● சிறப்பு விருந்தினர் அவர்கள் “நாட்டுப்புறவியலும் வாழ்வியலும்” என்ற தலைப்பில் மாணவர்களுக்குப் பயனுள்ள பல்வேறு தகவல்களை நுட்பமான முறையிலும், அறிவியல் செய்திகளோடும் இணைத்து அருமையானதொரு உரையாற்றினார்.
● சிறப்புரை நிகழ்விற்கு பிறகு மாணவர்கள், ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுடைய ஐயங்களை வினா எழுப்பி தெளிவுபெற்றனர்.
● நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வே. மணிகண்டன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி, நன்றியுரை வழங்கினார்.
● இந்நிகழ்வில் 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர்.
நன்றி!