எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்,

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
இராமாபுரம் வளாகம்,
சென்னை-89.
ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை (EFL) தமிழ், இந்தி, பிரெஞ்ச்  மொழிகள் பிரிவு சார்பாக
சங்கமம்-தமிழ் மன்றத் தொடக்க விழா – 2025  நடைபெ‌ற்றது.

தமிழ், பிரெஞ்ச், இந்தி ஆகிய மும்மொழிகளின் சங்கமமாக ‘சங்கமம்’ என்ற பெயரில் வெற்றிகரமாகத்  தொடங்கப்பட்ட தமிழ் மன்றத் தொடக்க விழா – 2025   நிகழ்வு
05/08/2025 பிற்பகல் 1.30-மணி முதல்.  3.30 மணி வரை பிளாக் 5 மூன்றாம் தளத்தில் உள்ள  கலை அரங்கில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கு.நாகம்மாள் அவர்கள் நிகழ்வுக்கு வந்திருந்து சிறப்பித்த அனைவரையும் வரவேற்றார்.

மாண்பமை முதன்மையர் முனைவர் எஸ்.  திருமகன் (S&H) ஐயா அவர்கள் மாணவர்களின் கற்றலைக் கலையறிவோடு வளர்த்தெடுத்து, அவர்களின் தமிழ்ப்பற்றை ஊக்கப்படுத்திட வேண்டும் என்று

 மாணவர்களுக்கு அறிவுறுத்திச் சிறப்பாகத்
தலைமை உரையை நிகழ்த்தினார்.நிகழ்வின் சிற‌ப்பு விருந்தினர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் உதவிப் பேராசிரியர், திருக்குறள் ஆய்வு மையத்தின் பொறுப்பாளர்  சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முதுமுனைவர்

 வாணி அறிவாளன்  அவர்களை மொழிகள் துறையின் தலைவர் முனைவர் ஜெபிலா ஷெர்லின் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்வின்   சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முதுமுனைவர் வாணி அறிவாளன்  அவர்கள் தனது சிறப்புரையின்  மூலமாகத் தற்கால மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் திட்டமிடலின் அவசியத்தை

 எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர்  அவர்களுக்கு துணை முதல்வர் J. திலீபன் ஐயா அவர்கள் நினைவு பரிசு வழங்கியும், துறைத் தலைவர் (EFL) முனைவர் J.ஜபீலா ஷெர்லின்  அம்மா அவர்கள் பொன்னாடை போர்த்தியும்

சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து சங்கமம் – தமிழ் மன்றத்தின்  மாணவப் பொறுப்பாளர்களைத் தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் க.சித்ரா பிரெஞ்ச் துறையின் உதவிப் பேராசிரியர் திருமதி. ரீனா,

 ஹிந்தி துறை உதவிப் பேராசிரியர் முனைவர்  கவிதா ராஜன் ஆகியோர்   அதிகாரப்பூர்வமாக  அறிவித்தனர். அவர்களுக்கான
பேட்ஜ்கள் வழங்கப்பட்டது.  நிகழ்வின்  நிறைவாக மாணவி செல்வி தமிழ்ச்செல்வி நன்றியுரை வழங்கினார்.