எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை, தமிழ்ப்பிரிவு சார்பாக  04-09-2025 அன்று அனைத்து இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டது. அதில் புல முதன்மையர், துறைத்தலைவர், சிறப்பு விருந்தினர், ஒருங்கிணைப்பாளர்கள், துறைப்பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

புலமுதன்மையர் தமிழின் பெருமைகளை பற்றியும் அதனை கற்றால் உலக தர அளவிற்கு எவ்வாறு உயர முடியும் என்றும் சிறந்த கருத்துக்ளை எடுத்துக்கூறினார். அதனைத் தொடர்ந்து துறைத்தலைவர் மாணவர்கள் எவ்வாறு தங்களை தமிழ் மொழியின் மூலம் உயர்த்திக் கொண்டு மேம்பாடு அடைய முடியும் என்பதனை கூறினார். இவர்களை தொடர்ந்து நிகழ்வின் சிறப்பு விருந்தினர் முனைவர் இளங்குமரன் சிவநாதன் பேராசிரியர் அவர்கள், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், மலேசியா அவர்கள் தமிழ் மொழி மூலம் எவ்வாறு மாணவர்கள் உலகத் தரத்திற்கு முன்னேற முடியும் என்பதனை விளக்கி மாணவர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு பதில் அளித்தார். இந்நிகழ்ச்சியின் வெளிப்பாடாக,

Ø  இன்றைய கல்வி உலகம் போட்டியும் புதுமையும் நிறைந்த தளமாக மாறியுள்ளது. உலகத்தரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், புதுமை முயற்சிகள், உலகளாவிய பணியிட வாய்ப்புகள் அனைத்தும் மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

Ø  இந்தப் பின்னணியில் “உலகத்தரத்திற்கு மாணவர்களின் தயார் நிலை” என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு, மாணவர்கள் எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும், உலகளாவிய சிந்தனை ஆகியவற்றை ஆராய்கிறது.

Ø  உலகத்தரத்தில் கல்வியினைப் பெறுதலுக்கு நமது இந்திய அரசும், பிற நாடுகளின் அரசும் எப்படி செயல்படுகிறது பற்றியும் கூறும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.

முக்கிய அம்சங்கள்

Ø  திறன் மேம்பாடு அடைதல்.

Ø  உலகளாவிய பார்வை: பன்னாட்டு ஒத்துழைப்புகள், பல மொழிகள் கற்றல், கலாச்சார விழிப்புணர்வு அடைதல்.

Ø  வேலை வாய்ப்புத் தகுதி பெறல்.

Ø  இந்த கருத்தரங்கத்தின் மூலம் மாணவர்கள் உலகளாவிய தரத்தில் போட்டியித் தயாராகும் முறைகளை பற்றி அறிதல்.

 

#பன்னாட்டுகருத்தரங்கம்

#உலகத்தரத்திற்குமாணவர்கள்

#திறன்மேம்பாடு