எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,இராமாபுரம் வளாகம், சென்னை-89. ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை (EFL)தமிழ் மொழி – பிரிவின் சார்பாக சிறப்புக் கருத்தரங்கம் இன்று- 02/09/2025 காலை 9.00-மணி முதல். 10.30 மணி வரை பிளாக் 5 மூன்றாம் தளத்தில் உள்ள கலை அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
- மாண்பமை முதன்மையர் முனைவர் எஸ். திருமகன் (S&H) ஐயா அவர்கள் மாணவர்கள் தமிழ் மொழியை வெறும் மொழியாகக் கருதாமல் வாழ்வியல் அடையாளமாய்ப் பற்றுடன் கற்றிட வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்திச் சிறப்பாகத் தலைமை உரையை நிகழ்த்தினார்.
- தகைசால் பொருந்திய கல்வியியல் துணை முதல்வர் முனைவர் N. புகழேந்தி அவர்கள் மாணவர்கள் தாய் மொழியில் பேசுவது நடைமுறையில் அம்மொழி அறிவோடு இயங்குவது தற்காலத்தில் எவ்வளவு அவசியமானது என்பதனை எடுத்தோதி மிக நேர்த்தியானதொரு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.
- சென்னை கீழ்ப்பாக்கம், தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரின் தமிழ்த்துறை,உதவிப் பேராசிரியர் ( ம)துறைத் தலைவர்,
பேராசிரியர் முனைவர் அ. சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் - சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு ,துறைத் தலைவர் (EFL) முனைவர் J.ஜெபீலா ஷெர்லின் அம்மா அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் அ. சண்முகம் அவர்கள் தனது சிறப்புரையின் மூலமாகத் மாணவர்கள் இலக்கியங்களில் உள்ள ‘தனிப்பாடல்கள்’ கதையாகவும் காப்பியமாகவும் உருவாக்கப்படுகிற பின்புலங்களை உள்வாங்கிக் கொண்டு அதன் வளர்ச்சி நிலைகளை அறிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி செம்மையானதொரு சிறப்புரையாற்றினார். - நிகழ்வின் நிறைவாக சங்கமம் தமிழ் மன்றத்தின் செயலாளர் மாணவர் முகமது ஆகில் நன்றியுரை வழங்கினார்.
