*பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்* உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113. *களப்பயணம்*
எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் இராமாபுரம்,சென்னை-89
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,
ஆங்கிலம் மற்றும் மொழிகள் துறை, தமிழ்ப் பிரிவு சங்கமம் – தமிழ் மன்றம் சார்பாக
26.09.2025 அன்று களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேரம்: காலை 9 மணி முதல் 3.30 மணி வரை.
இடம் : பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்* உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113.
பங்கேற்பாளர்கள் : இளங்கலை மாணவர்கள்
ஏறத்தாழ 50 மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்தின் பொறுப்பாளர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் பழந்தமிழரின் வாழ்வியல் குறித்து சிற்றுரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து
பழந்தமிழர் வாழ்வியல் காட்சி டத்தின் பொறுப்பாளராய் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள்
தம் உழைப்பினால் உருவாக்கிய
பத்திற்கும் மேற்பட்ட ஆவணப் படங்களிலிருந்து பழந்தமிழரின் நேர்த்தியான
வாழ்வியலை விளக்கும் விதமாகப் பழந்தமிழரின் புழங்கு பொருட்கள், போர்க்கருவிகள், மருத்துவ முறைகள், பழந்தமிழரின் நீர் மேலாண்மை, பழந்தமிழரின் ஐந்திணை வாழ்வியல் போன்ற ஆவணப் படங்களை மாணவர்கள் நேரடியாகக் காணும்படி திரையிடப்பட்டது அதனை, அனைத்து மாணவர்களும் கண்டு மகிழ்ந்தனர் .
இந்நகழ்வின் மூலம் பழந்தமிழரின் வாழ்வியல் சார்ந்த சிந்தனைகளை மாணவர்கள் அறிந்து பயன்பெற்றனர்.
மேலும், பழந்தமிழரின் வாழ்வியலை விளக்கக்கூடிய ஓவிய அரங்குகள், சிற்ப அரங்குகள், தொல்லியல் சான்றுகள் உள்ளடங்கிய அரங்குகளை மாணவர்கள் பார்வையிட்டு இதுவரை பாட நூல்களின் வழியாகவும் கற்றலின் வழியாகவும் கண்டறிந்த செய்திகளை நுட்பமாக விளங்கிக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்று பயன்பெற்றனர்.
பாடப்புத்தகம் தரும் அறிவை விட, களப்பயணம் தரும் அனுபவமே நிலையான கல்வி.”
“கற்றதனை நடைமுறையில் காண்பதற்குச் சிறந்த வாய்ப்பு களப்பயணம்.”
“விளக்கப்படங்களை விட கண்ணால் காண்பது மாணவரின் அறிவை விரிவாக்கும்; அதுவே களப்பயணத்தின் பயன்.”








