சென்னை, இராமாபுரம்

 எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் மொழிகள் துறை தமிழ்ப்பிரிவு சார்பாக பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வு *17.09.25 முதல் 23.09.25 வரை ( ஏழு நாட்கள்)* இணைய வழியில் நடைபெற்றது.
தலைப்பு-
 *மொழிபெயர்ப்பு மற்றும் ஊடகப் பயன்பாட்டுத் தமி்ழ் (இன்றைய வளர்ச்சியும் எதிர்காலத் தேவையும் )
 *பங்கேற்பார்கள்-* அனைத்துக் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள்
ஏழு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வின் தொடக்க நாளில்
 மாண்பமை புல முதன்மையர் முனைவர் எஸ். திருமகன் (அறிவியல்மற்றும்
மானுடவியல் புலம்) ஐயா அவர்கள் சிறப்பாகத் தலைமை உரை நிகழ்த்தினார்.
கல்வியியல் துணை முதல்வர் முனைவர் N. புகழேந்தி அவர்கள் மற்றும் துறைத் தலைவர் (EFL) முனைவர் J.ஜெபீலா ஷெர்லின் அம்மா அவர்கள்
வாழ்த்துரை வழங்கினர்.
அன்றைய முதல் நாளில்
 *கலைச் செல்லாக்கம்*
என்ற பொருளில் தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்
மொழிபெயர்ப்புத் துறை இணைப்
பேராசிரியர் முனைவர் சௌ. வீரலெக்ஷ்மி அவர்கள்
மிகச் சிறப்பாகக் கருத்துரை வழங்கினார்.
இரண்டாம் நாள்
முனைவர் ஆ. மணவழகன்
இணைப்பேராசிரியர் – முதுகலைத் தமிழ்த்
துறை,
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை, அவர்கள்
 *சமூக ஊடகங்களில் தமிழும் எதிர்காலவியலும்* என்ற பொருளில் கருத்துரை வழங்கினார்.
நிகழ்வின் மூன்றாம் நாள்
முனைவர் இரா. அறிவழகன்
விரிவுரையாளர்
திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி – திருவாரூர் அவர்கள்
 *இணைய ஊடகத் தமிழ் – நோக்கும் போக்கும்* என்ற பொருண்மையில் கருத்துரை வழங்கினார்.
நிகழ்வின் நான்காம் நாளில்
முனைவர் இளங்குமரன் சிவநாதன்
பேராசிரியர்,
சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம்,
மலேசியா அவர்கள்
 ‘ *மொழிபெயர்ப்புத் தளத்தில் தமிழ் ‘*
என்ற பொருண்மையில் கருத்துரை வழங்கினார்.
நிகழ்வின் ஐந்தாம் நாளில்
முனைவர் விமலா அண்ணாத்துரை
தமிழ்த்துறைத் தலைவர்
செல்லம்மாள் மகளிர் கல்லூரி,
சென்னை அவர்கள்
‘ *செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் தமிழும்’* என்ற பொருண்மையில் கருத்துரை வழங்கினார்.
 நிகழ்வின் ஆறாம் நாள்
முனைவர் வ.கோபாலகிருஷ்ணன்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் அவர்கள்
  *வானொலி ஊடகத்தமிழின் நோக்கும் போக்கும்*
என்ற பொருண்மையில் கருத்துரை வழங்கினார்.
நிகழ்வின் ஏழாம் நாளில்
முனைவர் ஹென்சி ஜீலியட்,
பேராசிரியர்,
கணினிப் பயன்பாட்டுத் துறை, சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம்,
சென்னை அவர்கள்
  *தமிழ் வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்*
என்ற பொருண்மையில் கருத்துரை வழங்கினார்.
ஏழுநாட்கள் மிகச்சிறந்த முறையில் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்ட து.
தமி்ழ் உதவிப்பேராசிரியர்கள்
முனைவர் க.சித்ரா முனைவர் ப.சாந்தி, முனைவர் சு. பலராமன் மற்றும் முனைவர் ம.திவாகர் ஆகியோர் நிகழ்வினைச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்…
பிற கல்லூரி நிறுவனங்களிலிருந்து ஏறத்தாழ 200 – கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்…
பயனுள்ள வகையில்
 நிகழ்வு வெற்றிகரமாக நிறைவுற்றது.