??????? ?????????? ????????? ????????????? - ????????? ???????

Date: 12.04.2021
10 ,11 ,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதைப் போட்டி:
இராமாபுரம் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் தமிழ்த்துறை சார்பில் 12-04-2021 திங்கட்கிழமை அன்று, மாலை 02.00 – 04.00 மணிவரை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இணையவழிக் கவிதைப் போட்டி நடைப்பெற்றது. இக்கவிதைப் போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 24 மாணவர்கள் பங்குபெற்று “1. தமிழ் எங்கள் உயிருக்குநேர், 2. எங்கள் புத்தாண்டு, 3. தமிழில் அறிவியல், ” என்ற தலைப்புகளில் சிறப்பாக கவிதை வாசித்தனர். சிறப்பு விருந்தினராக மாலோலன் கல்லூரி மதுராந்தகம் – தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர்பா.அமுல்சோபியா அவர்கள் நடுவராக பங்கேற்று கவிதை வாசிப்பு குறித்தும், புதுக்கவிதையின் ஆளுமைப்பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். சிறப்பாக கவிதை வாசித்த மாணவர்களைத் தேர்த்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கவிதைப்போட்டியில் முதல் பரிசு:
- Neha -Xth -Kannadi Vaappa International School ,Ramanatha puram
இரண்டாம் பரிசுகள் :
- V. Vidhula -12th , Velankanni .M.H.S.S -Ashok nagar &
- S. Harini Xth– Peace on Green Earth Public School, Kundrathur, Chennai.
மூன்றாம் பரிசுகள் :
1.S.Veenasri 11th– Sri Jaiya gopal Karodia H.S.S , Virugam pakkam.
- Fathima bjsmittha X th, K.V.l.S ,Ramanatha puram.
ஊக்கப் பரிசுகள்:
- Rooban prabu 12th ST. Johsap H.S.S, Thoothukudi
- Fakhrutheen apsal 12th,V.M.H.S.S ,Ashoknagar.
துறைத்தலைவர் (EFL) டாக்டர் வை.ரமா அவர்கள் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கினார்.உதவிப் பேராசிரியர்கள் திரு.கோ.கணேஷ், முனைவர் த.தென்னவன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர். முனைவர்ஆ.இரா.பாரதராஜா விழாவை ஒருங்கிணைத்தார். உதவிப்பேராசிரியர் எஸ். பிரியா காமேஸ்வரி நன்றி கூறினார். இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.