தலைப்பு: உயர்கல்வி விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி

சிறப்பு விருந்தினர்: டாக்டர் மு. இராஜேந்திரன் I.A.S (மாநிலத்தேர்தல் ஆணையர், கூட்டுறவுத்துறை)

நாள்: 11.06.2021

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம் தமிழ்த்துறை நடத்தும் 10,11,12-ஆம்வகுப்பு (Brand Building) மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடத்திய உயர்கல்வி விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி 11-06-2021 வெள்ளிக்கிழமை மாலை: 02-00 மணிக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர் டாக்டர் மு.இராஜேந்திரன் IAS (மாநிலத் தேர்தல் ஆணையர், கூட்டுறவுத் துறை) அவர்கள் பங்கு பெற்று மாணவர்களுக்கு ஊக்க உரை (Motivatiol Speech) வழங்கினார். மாணவர்கள் இந்த அரிய பருவத்தில் ஆற்ற வேண்டிய கடமைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பங்களிப்பு பற்றித் தெளிவாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். மேலும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் கல்வித் தொண்டு மற்றும் தமிழ்ப்பேராயத்தின் அளப்பரிய தமிழ்த்தொண்டு யாவற்றையும் வெகுவாகப் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் குழுமம் இராமாபுரம் மற்றும் திருச்சி  வளாகத் தலைமை இயக்குநர் டாக்டர் என்.சேதுராமன் தலைமை உரையில், எஸ்.ஆர்.எம். குழுமத்தின் கல்விப்பணி, படிப்பு வகைகள் பற்றி எடுத்துரைத்தார். தமிழ்த்துறை (E.F.L) நடத்திய மாநில அளவிலான கவிதைப் போட்டிக்கான பரிசளிப்பு, மாணவர்கள் பேராசிரியர்களின் செயல் பாடுகளைப் புகழ்ந்துரைத்தார். இராமாபுரம் (S&H) முதன்மையர் முனைவர் சி.சுந்தர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார், துறைத்தலைவர் டாக்டர் வை.ரமா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.இரா.பாரதராஜா வரவேற்புரை வழங்க, உதவிப் பேராசிரியர்கள் இளங்கோ தொழில்நுட்ப உதவி செய்ய, திருமதி  பிரியா காமேஸ்வரி நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி  மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.