தலைப்பு: 11, 12  பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கருக்கான இணையவழி இரண்டு நாள் ஓலைச்சுவடிப் பயிலரங்கம்.

முதல் நாள்: 24.06.2021

தலைப்பு: சுவடிக்கலை ஓர் அறிமுகம்

இரண்டாம் நாள்: 25.06.2021

தலைப்பு: சுவடி படிக்கவும் பதிப்பிற்குமான பயிற்சி

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், தமிழ்த்துறை(EFL) சார்பாக 11, 12 பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கருக்கான இணையவழி இரண்டு நாள் ஓலைச்சுவடிப் பயிலரங்கம்.  சிறப்பாக நடைப்பெற்றன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் பால சீனிவாசன் அவர்கள் சிறப்புரை வழக்கினார்.  அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதல்வர் முனைவர்.சி.சுந்தர், துணைமுதல்வர் என்.அசோகன் மற்றும் துறைத்தலைவர் முனைவர் வை.ரமா அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. தமிழ்த்துறை (EFL) தலைவர் முனைவர் வை.ரமா அவர்கள் தலைமையுரை வழங்கி நிகழ்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

ஓலைச்சுவடிகளில் எழுதும் முறைப்பற்றியும் அதனை எவ்வாறு பாதுகாப்பது பற்றியும் அவைகள் எவ்வாறு படியெடுக்கப்பட்டு காலம்காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்கினார். ஓலைச்சுவடிகள் எங்கெல்லாம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஓலைச்சுடிகளில் குறிப்பாக எழுதப்படும் எழுத்துகள் பற்றியும் தமிழ் எண்கள், ஆண்டுகள், அளவீடுகள் எல்லாம் எவ்வாறு ஓலைச்சுவடிகளில் குறிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் ஓலைச்சுவடி படிக்கும் முறைப் பற்றியும் பதிப்பு முறை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

ஓலைச்சுவடிப் பயிலரங்க நிகழ்ச்சிக்கு 423 பேர் ஆர்வமுடன் பதிவு செய்தனர். முதல் நாள் நிகழ்ச்சியில் 139 பேர் பங்கேற்று சிறப்பு செய்தனர். இரண்டாம் நாள் நிகழ்வில் 172 பேர் வரை பங்கேற்று சிறப்புச் செய்தனர்.

 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

பெ.இளங்கோ, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்.

எஸ்.கமேஸ்வரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர்.