ஓவியப் போட்டி அறிக்கை

எஸ்.ஆர்.எம்  அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம். இராமாபுரம் வளாகம். சென்னை -89   அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் தமிழ்த்துறையின் (EFL)வழியாக 15.06.2021  முதல் 20.06.2021 அன்று வரை 11ஆம் 12ஆம் வகுப்புப்  பள்ளி மாணவர்களுக்காக  கொல்லும் கொரோனா சொல்லும் உண்மை என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில்  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பயிலும்  மாணவர்கள்  மிகவும் ஆர்வத்துடன் கலந்து  கொண்டனர். இப்போட்டியில்  சுமார் 78க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்து பங்கு கொண்டனர். இணைய வழியிலான ஓவியப்போட்டி அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதன்மையர்  முனைவர்.சி.சுந்தர் மற்றும் துறைத்தலைவர்  முனைவர் வை.ரமா அவர்களின்   மேற்பார்வையின் கீழ் நடைபெற்றது. இப்போட்டியை எஸ்.ஆர்.எம் இராமாபுரம் வளாக தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்   கோ.கணேஷ், த.தென்னவன்  ஆகியோர் ஒருங்கிணைத்தனர்