தலைப்பு : காமராஜர் பிறந்தநாள் – கல்வி வளர்ச்சி நாள் விழா
நாள்: 24.07.2021
சிறப்பு விருந்தினர்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை வீ.பாரதிதாசன்
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், தமிழ்த்துறை (EFL) சார்பாக “காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழா” 24-07-2021-சனிக்கிழமை மாலை : 02-30-மணிக்குச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை நீதியரசர் வீ.பாரதிதாசன் அவர்கள் பங்கேற்று காமராஜரின் ஆட்சி, நேர்மை, எளிமை, ஒழுக்கம், உழைப்பு, தியாகம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். மாணவர்கள் காமராஜரின் வாழ்வியலைக் கடைப்பிடிக்க வேண்டும் –என அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் எஸ். ஆர். எம். இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத் தலைமை இயக்குநர் Dr N.சேதுராமன் முன்னிலை உரையில் தமிழ்த்துறையின் சிறந்த செயல்பாடுகளையும் காமராஜர் புகழையும் சிறப்பாக எடுத்துரைத்தார்.
அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதல்வர் முனைவர்சி.சுந்தர் வாழ்த்துரை வழங்கினார். மற்றும் துணை முதல்வர்கள் முனைவர்ஜெ.திலீபன், முனைவர்என்.அசோகன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் ஆ.இரா.பாரதராஜா வரவேற்புரை வழங்க, உதவிப் பேராசிரியர்கள் பெ.இளங்கோ, திருமதி.எஸ்.காமேஸ்வரி உதவியுடன் நிகழ்ச்சி சிறப்புற்றது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் கவிதை வாசித்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்களிப்புடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
