“செய்திமடல்” வெளியீட்டு விழா நிகழ்ச்சி அறிக்கை

எஸ்.ஆர்.எம் இராமாபுரம் வளாகத்தில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், தமிழ்த்துறை(EFL) சார்பில் செய்திமடல் வெளியீட்டு விழா 03.09.2021 அன்று A.V.Hallஇல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 2020-2021 கல்வியாண்டில் தமிழ்த்துறை பல்வேறு நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக நடத்தியது. கருத்தரங்கம் (கீழடி, தொல்லியியல், தெருக்கூத்து, பழங்குடிகள்….) புத்தகக்காடு, விவாதமேடை, பட்டிமன்றம், அறிஞர்களின் பிறந்தநாள் விழா, பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் என எண்ணற்ற நிகழ்ச்சிகளைத் தமிழ்ப் பேராசியர்கள் நடத்தினர், அதனை ஆவணப்படுத்தும் விதமாக இச்செய்திமடலை உருவாக்கியுள்ளோம். அறிவியல் மற்றும் மானுடவியல் புல முதன்மையர் முனைவர் சி.சுந்தர் ஐயா அவர்கள் செய்திமடலை வெளியிட, திட்ட  இயக்குநர் Dr. தாமு அவர்கள், துணைமுதல்வர்கள் முனைவர் என்.அசோகன் அவர்கள், முனைவர் ஜெ.திலீபன் அவர்கள், campus life முதன்மையர் முனைவர் உஷா அவர்கள், துறைத்தலைவர் (EFL) முனைவர் வை.ரமா அவர்கள் ஆகியோர் செய்திமடலை பெற்றுக்கொண்டனர். தமிழ்த்துறை பேராசிரியர் கோ.கணேஷ் நிகழ்ச்சித் தொகுத்து வழங்கினார். அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் பேராசிரியர்கள் அனைவரும் பங்குபெற்றனர்.