விவாதமேடை –  நிகழ்ச்சி அறிக்கை

தலைப்பு: இணையவழிக் கல்வி யாருக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது? ஆசிரியர்களுக்கா! மாணவர்களுக்கா!

நாள்: 02.09.2021

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம். அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், தமிழ்த்துறை (EFL), சார்பாக 02.09.2021 வியாழக்கிழமை அன்று ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் இணையவழிக் கல்வி யாருக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது? ஆசிரியர்களுக்கா! மாணவர்களுக்கா!”         என்ற தலைப்பில்  விவாதமேடை நிகழ்ச்சி மைய நூலகத்தில் (A.V Hall) சிறப்பாக நடைப்பெற்றது. நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் சி.சுந்தர் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைமுதல்வர் முனைவர் என்.அசோகன்  கல்வியியல், துணைமுதல்வர், முனைவர் ஜெ.திலீபன் அவர்களும் மற்றும் துறைத்தலைவர் முனைவர் வை.ரமா அவர்களும் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.  நிகழ்ச்சியினை வ.ஜெயபார்வதி அவர்கள் ஒருங்கிணைத்தார். முனைவர் ஆ.இரா.பாரதராஜா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  முனைவர் இரா.அகஸ்தியர் அவர்கள்  விவாதமேடை நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வழிநடத்தினார். ஆசிரியர்களுக்கே! என்ற தலைப்பில் முனைவர் க.இமானுவேல், பேரா.மு.ஜெய்கணேஷ், பேரா.கா.ஆனந்தி, பேரா.பெ.இளங்கோ ஆகியோரும், மாணவர்களுக்கே! என்ற தலைப்பில் முனைவர் சு.சுரேஷ், பேரா.P.M.கவிதா, முனைவர் ஜெ.சீதா, பேரா.அ.ந.அம்ரீன் பாத்தீமா ஆகியோரும் கலந்துக்கொண்டு பேசினார்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:

பெ.இளங்கோ, உதவிப்பேராசிரியர்,

.ஜெயபார்வதி, உதவிப்பேராசிரியர்,

எஸ்.காமேஸ்வரி, உதவிப்பேராசிரியர்