முன்று நாள் பயிலரங்கம்

தலைப்பு: “தமிழை ஏன் கற்க வேண்டும்

சிறப்பு விருந்தினர்கள்: தமிழ்த்துறை பேராசிரியர்கள்

நாள்: 09.12.2021 முதல் 11.12.2021 வரை 

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், தமிழ்த்துறை(EFL) நடத்தும் “தமிழை ஏன் கற்க வேண்டும்” என்ற பொருண்மையிலான இணையவழி மூன்று நாள் பயிலரங்கம்     இனிதே நடந்தேறியது.  இந்நிகழ்வில் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் முதல்வர் முனைவர் சி.சுந்தர் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முனைவர் ஜெ.திலீபன் துணை முதல்வர் (நிர்வாகம்), முனைவர் என்.அசோகன் துணை முதல்வர் (கல்வியியல்),  முனைவர் வை.ரமா துறைத்தலைவர் ஆகியோர் வாழ்த்துரை வழக்கினார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேரா.கோ.கணேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஆர்வமுடன் பதிவு செய்திருந்தனர். zoom வாயிலாக 300க்கும் மேற்பட்ட மாணவர்களும், youTube வாயிலாக நேரலையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.

முதல் நாள் பயிலரங்கம் : 09.11.2021

முதல் அமர்வில் பேரா.கோ.கணேஷ் அவர்கள் “தமிழர் வாழ்வியலும் வரலாறும்“ என்கின்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். தமிழ் மொழியின் சிறப்பு பற்றியும் தமிழறிஞர்கள் செய்த தொண்டினையும், தமிழ் இலக்கியம் படிப்பதால் கிடைக்கின்ற வேலை வாய்ப்புகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இரண்டாம் அமர்வில் திரு.பெ.இளங்கோ உதவிப்பேராசிரியர் சங்க இலக்கியங்கள்தமிழர் வாழ்வியலும் வரலாறும்என்கின்ற தலைப்பில் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் எவ்வாறு இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தனர் என்பதை சங்க பாடல்களின் வாயிலாக எடுத்துரைத்தார்.

இரண்டாம் நாள் பயிலரங்கம்: 10.12.2021

இரண்டாம் நாள் பயிலரங்கத்தை ஆங்கிலத்துறை பேராசியரும் EFL(S&H) துறையின் ஒருங்கிணைப்பாளரும் முனைவர் இமானுவேல் பயிலரங்கின் நோக்கினை மாணவர்களிடம் எடுத்துக்கூறி வாழ்த்தினார்.

முதல் அமர்வில் முனைவர் த.தென்னவன் அவர்கள் “அற / காப்பியங்கள்- தமிழர் வாழ்வியலும் வரலாறும்” என்கின்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார்.

இரண்டாம் அமர்வில் பேரா.எஸ்.காமேஸ்வரி அவர்கள் “பக்தி இலக்கியங்கள் – தமிழர் வாழ்வியலும் வரலாறும்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

மூன்றாம் நாள் பயிலரங்கம்: 11.12.2021

முதல் அமர்வில் முனைவர் ஆ.இரா. பாரதராஜா அவர்கள் “சிற்றிலக்கியங்கள் – தமிழர் வாழ்வியலும் வரலாறும்“ என்கின்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார்.

இரண்டாம் அமர்வில் பேரா. வ.ஜெயபார்வதி அவர்கள் “நவீன இலக்கியங்கள்  – தமிழர் வாழ்வியலும் வரலாறும்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இப்பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் பேரா.கோ.கணேஷ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்தும் நிறைவுரையும் வழங்கினார்.

 தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு:-

பேரா. உதயகுமார், கணினி அறிவியல் துறை,

பேரா.பெ. இளங்கோ தமிழ்த்துறை.

பேரா.த.தென்னவன் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தார்,