இணையவழி கலந்துரையாடல்

தலைப்பு: இணையவழி மூலம்-கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், மருத்துவம் பொருளாதாரம், பண்பாடு – பற்றிய கலந்துரையாடல்

நாள்: 07.03.2021

S.R.M ,S&H, இராமாபுரம் மாணவர்கள் மற்றும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் GREATER ATLANTA TAMIL SANGM (GATS ) தமிழ்மாணவர்கள் பங்குபெற்ற இணையவழி மூலம்-கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், மருத்துவம் பொருளாதாரம், பண்பாடு – பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மற்றும் தொழில் ஆளுமைகள் மூவர் பங்கேற்று, SRM-S&H மாணவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் GATS மாணவர்கள் முன்கூட்டியே பதில் தயாரித்து, தயாராக இருந்து, அழகான முறையில் பதில்அளித்தனர்! நம் SRMIST S&H மாணவர்கள் எட்டுப்பேர் பங்குபெற்று, மேலும் பல வினாக்களை எழுப்பி ஐயம் தெளிந்தனர். இராமாபுரம் S.R.M(S&H) முதன்மையர்(Dean ) Dr.சி.சுந்தர், துறைத் தலைவர் Dr.V.ரமா -என யாவரும் வாழ்த்துரை வழங்கிப் பாராட்டினர்.

நல்லமுறையில் மாணவர்களை நெறிப்படுத்திய அமெரிக்க வழக்கறிஞர் பூங்கொடி விஜயகுமார் ‘PRO’ தலைவர் திரு.சுவாமிநாதன், கவிஞர்வி.கிரேஸ்பிரதிபா ஆகியோர் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்!

SRM ,S&H-NSSஅமைப்பு ஒருங்கிணைப்பாளரும் நிகழ்ச்சி நெறியாளருமான முனைவர் ஆ.இரா.பாரதராஜா நன்றியுரைவழங்கினார். மிகவும் பயனுள்ள மாணவர்கள் நட்புறவு இணையவழிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், அயல் நாட்டவர்கள் பங்கு பெற்றனர்.

நன்றி

முனைவர் ஆ.இரா.பாரதராஜா

S.R.MIST- RAMAPURAM –  N.S.S