நிகழ்ச்சி: பட்டிமன்றம்
தலைப்பு: “இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக இருப்பது ஊழலா? மக்கள் பெருக்கமா?
தலைமை: முனைவர் சி.சுந்தர், முதல்வர் (S&H) SRMIST
முன்னிலை: முனைவர் ஜெ.திலீபன், துணை முதல்வர், நிர்வாகவியல்
முனைவர் என்.அசோகன், துணை முதல்வர், கல்வியியல்
இடம்: Block V, மையநூலகம், நாள்: 13.01.2021 (புதன் கிழமை) நேரம்: காலை 10.00 மணி
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம். இராமாபுரம், நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் 13-01-2021 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு “இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக இருப்பது ஊழலா? மக்கள் பெருக்கமா?” என்ற தலைப்பில் சிறப்பான பட்டிமன்ற நிகழ்ச்சி மையநூலகத்தில் நடைபெற்றது.
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம். முதல்வர் முனைவர் சி.சுந்தர் ஐயா அவர்கள் தலைமையேற்று நிகழ்வைத் தொடக்கி வைத்தார். துணை முதல்வர்கள் முனைவர் ஜெ.திலீபன், முனைவர் என்.அசோகன் அவர்கள் முன்னிலை வகித்தனர். அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும், உதவிப்பேராசிரியர்களும் நிகழ்ச்சியல் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் தடையாக இருப்பது ஊழலே என்ற தலைப்பில் முனைவர் இரா.அகஸ்தியர் (அணித்தலைவர்) HOD, BCA, முனைவர் P.ஆர்த்தி, திரு.பெ.இளங்கோ, திருமதி PM.கவிதா, செல்வி அம்ரின் ஆகியோரும், மக்கள் பெருக்கமே? என்ற தலைப்பில் முனைவர் ஆ.ஜெயபால் (அணித்தலைவர்) HOD, Commerce, முனைவர்சு.சுரேஷ், திருமதிவ.ஜெயபார்வதி, திரு.சதிஷ்குமார், திரு.S.ராஜ்கமல் ஆகியோரும் கலந்துகொண்டு தங்களது இருதரப்பு வாதங்களையும் வாதிட்டனர். முனைவர் ஆ.இரா.பாரதராஜா அவர்கள் பட்டிமன்ற நடுவராக இருந்து இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் தடையாக இருப்பது ஊழலே என்று தீர்ப்பு வழங்கினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
ஆ.இரா.பாரதராஜா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை