அனைவருக்கும் வணக்கம்,

உலகப்பொதுமறையாக விளங்கும் திருக்குறளின் சிறப்புகளையும், திருவள்ளுவரின் சிறப்புகளையும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் எடுத்துச்செல்லும் உயரிய நோக்கோடு  இணையவழியில் திருக்குறளின் சிறப்புகளை உணர்த்தும் வகையில் கட்டுரை, கவிதை, வினாடிவினா போட்டிகள்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பதிவுப்படிவம்

Click here!

குறிப்பு: பதிவுப்படிவத்தை பூர்த்தி செய்தவுடன் புலனக்குழுவில் சேர்வதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் அதனை சொடுக்கி புலனக்குழுவில் இணையவும். நன்றி

கட்டுரை, கவிதை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2021

கட்டுரை தலைப்பு:

  • திருக்குறள் உணர்த்தும் நட்பு (அல்லது) திருக்குறள் உணர்த்தும் கல்வி.

கவிதை தலைப்பு :

  • திருக்குறள் ஒரு சகாப்தம் (அல்லது)  திருவள்ளுவர் ஒரு சகாப்தம்.

குறிப்பு:

  • கட்டுரை, கவிதை எழுத விரும்புவோர் மற்றும் வினாடிவினாவில் பங்கேற்க விரும்புவோர் பதிவுப்படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். புலனக்குழுவில் இணையவேண்டும்.
  • கட்டுரை – ஏதேனும் ஒரு தலைப்பில் 3 முதல் 4 பக்கங்களுக்கு மிகாமல் சொந்த கையெழுத்தில் எழுதி அனுப்ப வேண்டும்.
  • கவிதை – ஏதேனும் ஒரு தலைப்பில் 20 வரிகளுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும்.
  • போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
  • மேலும் விவரங்கள் புலனக்குழுவில் பகிரப்படும்.

துறைத்தலைவர்

முனைவர் வை.ரமா

ஒருங்கிணைப்பாளர்கள் :

வ. ஜெயபார்வதி (பேச : 8072366516) பெ.இளங்கோ (பேச: 8110898722)

உதவிப் பேராசிரியர்கள்