நிகழ்ச்சி : பட்டிமன்றம்

தலைப்பு : “குடும்பச் சுமைகளைப் பெரிதும் சுமப்பவர்கள், ஆண்களா? பெண்களா?

தலைமை : முனைவர் சி.சுந்தர், முதல்வர் (S&H) SRMIST

முன்னிலை:  முனைவர் ஜெ.திலீபன், துணை முதல்வர், நிர்வாகவியல்

                     முனைவர் என்.அசோகன், துணை முதல்வர், கல்வியியல்        

வாழ்த்துரை: முனைவர் வை.ரமா, துறைத் தலைவர் (EFL)       

இடம்: Block V, மையநூலகம், நாள்: 08.03.2021 (திங்கட் கிழமை) நேரம்: மதியம் 20.00 மணி

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம். இராமாபுரம் வளாகம்,  நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சார்பில் 08.03.2021 அன்று உலக மகளிர் தினவிழாவில் “குடும்பச் சுமைகளைப் பெரிதும் சுமப்பவர்கள், ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைப்பெற்றது.

முதல்வர் முனைவர் சி.சுந்தர் அவர்கள் அனுமதியுடன் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில், கல்வியியல் துணை முதல்வர்  Dr.N.அசோகன் S & H (E.F.L) துறைத் தலைவர் (EFL) முனைவர் வை.ரமா -என யாவரும் வாழ்த்துரை வழங்கிப் பாராட்டினர். சிறப்பு விருந்தினராக வருகை தந்த, சூரியத்தென்றல் பெண்கள் முன்னேற்ற அமைப்பின், நிறுவனர், தலைவர், டாக்டர் விஜயலட்சுமி மாசிலாமணி USA, டாக்டர்  வை.ரமா HOD-EFL , அவர்களின் தன்னலமற்ற கல்வித் தொண்டைப் பாராட்டி, சூரியத்தென்றல் -அமைப்பின், சிறந்த பெண்மணிவிருது வழங்கி கௌரவித்தார்.

பின்னர் நடைபெற்ற “குடும்பச் சுமைகளைப் பெரிதும் சுமப்பவர்கள், ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நிகழ்ந்த” பட்டிமன்றத்தில் பேராசிரியைகளும், பேராசிரியர்களும் பங்கு பெற்றுச் சிறப்பாக வாதாடினர். நடுவர் பொறுப்பேற்ற  டாக்டர் விஜயலட்சுமி மாசிலாமணி , பெண்களே – எனத் தீர்ப்பு வழங்கினார்.

கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவிகளுக்கும், 07-03-2021  அமெரிக்க மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்திய மாணவர்களுக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டன. உதவிப் பேராசிரியை  தீபா (Commerce) நன்றி கூறினார்.

NSS   ஒருங்கிணைப்பாளர்

முனைவர்ஆ.இரா.பாரதராஜா