தலைப்பு: “புத்தகக்காடு” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்

சிறப்பு விருந்தினர்:  முனைவர் பா.ஜெய்கணேஷ், செயலர் தமிழ்ப்பேராயம், தமிழ்த்துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம் காட்டாங்குளத்தூர்.

நாள்: 31.12.2020 (வியாழக்கிழமை) நேரம்: 2.00 முதல் 3.45

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், தமிழ்த்துறை(EFL) 31.12.2020 வியாழக்கிழமை (2.00 முதல் 3.45மணி வரை) அன்று நடத்திய “புத்தகக்காடு” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் என்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  அதில் சிறப்பு விருந்தினராக முனைவர் பா.ஜெய்கணேஷ், செயலர் தமிழ்ப்பேராயம், தமிழ்த்துறைத் தலைவர், எஸ். ஆர்.எம், காட்டாங்குளத்தூர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இராமாபுர வளாகம் அறிவியல் மற்றும் மானுடவியல் புல முதல்வர் முனைவர் சி.சுந்தர் ஐயா அவர்கள் தலைமையேற்று நிகழ்வைத் தொடங்கி வைத்தார். துறைத்தலைவர் முனைவர் வை.ரமா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தை சார்ந்த மாணவி ஜீவிதா மற்றும் மாணவன் பேரழகன், பேராசிரியர்கள் க.கவிதா மற்றும் கோ.கணேஷ் ஆகியோர் நான்கு நூல்களை அறிமுகப்படுத்தி விவாதித்தனர். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் கோ.கணேஷ், (தமிழ்த்துறை, EFL) ஒருங்கிணைந்தார். மாணவி வைஷ்ணவி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் ஏராளமாக மாணவர்கள், பேராசிரியர்கள், புத்தக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

கோ.கணேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை