பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா(120) மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா இராமாபுரம் வளாகம், எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் , அறிவியல் மற்றும் மானுடவியல் புலம் தமிழ்த்துறை சார்பில் 15. 7. 2022  வெள்ளிக்கிழமை அன்று  தமிழ்த்துறை மற்றும்  பிறதுறைப் பேராசிரியர்கள் மேலும் மாணவர்கள் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் காலை 10 மணி அளவில் சிறப்பாகத் தொடங்கப்பட்டது.

விழாவிற்குத் தலைமையேற்று அறிவியல் மற்றும் மானுடவியல் புல முதன்மையர் மேஜர் முனைவர் எம். வெங்கட்ரமணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இவ்விழாவிற்கு நிர்வாகவியல் துணை முதல்வர் முனைவர் ஜெ.திலீபன் மற்றும் கல்வியியல் துணை முதல்வர் முனைவர் என்.அசோகன் மேலும், அயல்மொழி மற்றும் ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர்

க. இம்மானுவேல் ஆகியோரின் வாழ்த்துடன் விழா இனிதே அரங்கேறியது. விழா ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பாரத ராஜா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.  தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செம்மையாக நிகழ்த்தினர்.

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கு. நாகம்மாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழாவை ஒட்டி நிகழ்த்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சு ஆகியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறைப் பேராசிரியருமான கோ. கணேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்வின் நிறைவாக நாட்டுப்பண் பாடப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.