எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்,
ராமாபுரம் வளாகம், சென்னை.
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்.
தமிழ்த்துறை
கருத்தரங்கம்
நிகழ்ச்சி அறிக்கை
வணக்கம். தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பாடம் சார்ந்த கருத்தரங்க நிகழ்ச்சி
01.02.2023 அன்று நடைபெற்றது. நண்பகல் 1:30 மணி அளவில் தழிழ்த்தாய் வாழ்த்துடன்
தொடங்கிய கருத்தரங்க நிகழ்விற்கு. புல முதன்மையர் மேஜர் முனைவர் எம்.வெங்கட்ரமணன்
அவர்கள் தலைமை வதித்தார். கல்வியியல் துணை முதல்வர் முனைவர் வே.சரவணன்
மற்றும் நிர்வாகவியல் துணை முதல்வர் முனைவர் ஜெ. திலீபன் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர். ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் (8ஈட) துறைத்தலைவர் முனைவர்
க.இமானுவேல் அவர்கள் தலைமையேற்று வாழ்த்துரையாற்றினார். தமிழ்மன்ற
ஒருங்கிணைப்பாளர் திரு.கோ.கணேஷ் அவர்கள் மகிழ்வுரையாற்றினார். தமிழ்த்துறை
உதவிப்பேராசிரியர் முனைவர் ‘ஞா.செல்வகணபதி அனைவரையும் வரவேற்று
வரவேற்புரையாற்றி, விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.
இக்கருத்தரங்க நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் ம.பிரபு
(உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை. து.கோ.வைணவக் கல்லூரி. அரும்பாக்கம்.) முனைவர்
‘ஞா.விஜயகுமாரி (உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை. அ.மா.ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம்.)
ஆகியோர் பங்கேற்று முறையே சங்க இலக்கியங்கள். நீதி இலக்கியங்கள் எனும்
பொருண்மையில் சிறப்புரையாற்றினார்கள். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் மற்றும்பிரெஞ்சுத்துறையின் உதவிப்பேராசிரியர்கள் பங்குகொண்டு சிறப்பித்தனர். பல்வேறு
துறைசார்ந்த மாணவ மாணவிகள் திரளாகப் பங்குபெற்றுப் பயனடைந்தனர்.
நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க.சித்ரா நன்றி உரை
கூறினார். நாட்டுப்பண்ணுடன் கருத்தரங்க நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. இக்கருத்தரங்க
நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்களான முனைவர்.ஞா.செல்வகணபதி. முனைவர்
க.சித்ரா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.