எஸ்‌.ஆர்‌. எம்‌. அறிவியல்‌ மற்றும்‌ மானுடவியல்‌ புலம்‌, இராமாபுரம்‌
வளாகம்‌-

தமிழ்த்துறைஞாட நடத்தும்‌ சிறப்பு கருத்தரங்க நிகழ்வு

07 /02 /2023 – செவ்வாய்க்கிழமை பிற்பகல்‌ 2:00 மணி முதல்‌ 4:00 மணி
வரை மூன்றாம்‌ தளம்‌ கூட்ட அறையில்‌ மிகச்‌ சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிழா அறிவியல்‌ மற்றும்‌ மானுடவியல்‌ புலத்தின்‌
முதன்மைர்‌ முனைவர்‌ மேஜர்‌ எம்‌. வெங்கட்ரமணன்‌ மற்றும்‌ நிர்வாகவியல்‌
துணை முதல்வர்‌ முனைவர்‌ ஜெ. திலீபன்‌, கல்வியில்‌ துணை முதல்வர்‌
முனைவர்‌ வே.சரவணன்‌ ஆகியோரின்‌ வாழ்த்துகளுடன்‌ தொடங்கியது. அயல்‌
மொழி மற்றும்‌ ஆங்கிலத்‌ துறைத்‌ தலைவர்‌ முனைவர்‌ க.இமானுவேல்‌
அவர்கள்‌ வாழ்த்துரை வழங்கினார்‌.

சிறப்புரையாளர்‌ தொன்‌ போஸ்கோ கலை மற்றும்‌ அறிவியல்‌
கல்லூரியைச்‌ சார்ந்த பேராசிரியர்‌ முனைவர்‌ ச.ஆசைக்கண்ணு அவர்கள்‌
“மலையாளி இனப்‌ பழங்குடிகளின்‌ சடங்கு முறைகள்‌” என்ற தலைப்பில்‌
ஆற்றிய உரை காட்சி படத்துடன்‌, தெளிவான விளக்கத்தோடு அமைந்து
அப்பழங்குடிகளை நேரில்‌ கண்டது போன்ற ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்‌
வண்ணம்‌ அமைந்திருந்தது.

நாட்டு நலப்‌ பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ பேராசிரியர்‌ முனைவர்‌
ஆ.இரா. பாரதராஜா அவர்கள்‌ வரவேற்புரை வழங்கினார்‌.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்‌ முனைவர்‌ கு.நாகம்மாள்‌ அவர்கள்‌
சிறப்புரையாளரைப்‌ பற்றிய அறிமுக உரையினையும்‌ மற்றும்‌
நன்றியுரையினையும்‌ வழங்கினார்‌.

இந்நிகழ்வில்‌ 100 – க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ பங்கு பெற்றனர்‌.
சிறப்புரையாளரின்‌ உரைக்குப்பின்‌ அம்மாணவர்களின்‌ கலந்துரையாடல்‌ மூலம்‌
தங்களின்‌ ஐயங்களைத்‌ தெளிவுபடுத்திக்‌ கொண்டனர்‌.

நன்றி!