அனைவருக்கும் வணக்கம்.

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் புலம், இராமாபுரம் வளாகம்,சென்னை-89.

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்

தமிழ்மன்றம் நடத்தும் புத்தகக்காடு பயணம்-6

16.03.2023 வியாழக்கிழமை, பிளாக்-5, 3வது தளம், Gallery Hall, முற்பகல் 11.00 முதல் 12.45 வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் முனைவர் வ.சுப்பையா பாரதி அவர்கள் தலைமை உரையாற்றினார்.

“ஆடை வரலாறும் அரசியலும்” என்ற நூலை காட்சித் தொடர்பியல் துறை முதலாமாண்டு மாணவர் பூஜாஸ்ரீ விமர்சனம் செய்தார்.

“சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை” என்ற நூலை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கு.நாகம்மாள் விமர்சனம் செய்தார்.

“பெண்மை என்றொரு கற்பிதம்” எனும் நூலை முன்வைத்து- மூன்றாமாண்டு கணினி மேலாண்மைத் துறை மாணவர் க.முத்துப்பிரபாகரன் பேசினார்.

“துப்பட்டா போடுங்க தோழி” எனும் நூலை முன்வைத்து- முதலாமாண்டு உயிரித் தொழில்நுட்பவியல் துறை மாணவர் மகாலட்சுமி விமர்சித்தார்.

இந்நிகழ்வை இரண்டாமாண்டு இதழியல் துறை மாணவர் நவ்யா தொகுத்து வழங்கினார்.

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தைச் சார்ந்த பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வை தமிழ்மன்றத் துறை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்மன்ற மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.

நன்றி

பேரா.கோ.கணேஷ்
தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர்