NSS தொடக்க விழா மற்றும் உறுதிமொழியேற்பு விழா – அறிக்கை
எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம், அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், இராமாபுரம் வளாகம், SRMIST NSS சார்பாக 24.09.2021- வெள்ளிக்கிழமை அன்று மதியம் 02-00-மணிக்கு, N.S.S தின விழாவை முன்னிட்டு, மையநூலகத்தில் NSS -தொடக்க விழா, மற்றும் உறுதிமொழியேற்பு விழா சிறப்பாக நடைப்பெற்றன. விழாவில் கல்லூரி முதல்வர் Drசி.சுந்தர் அவர்கள் தலைமையேற்று NSS செயல்பாடுகளைப் பாராட்டியும் N.S.S-சிறப்பு மற்றும் நன்மைகளை எடுத்துரைத்தார். முனைவர் ஜெ.திலீபன் V.P, முனைவர் என். அசோகன் V.P ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
NSS துறை ஒருங்கிணைப்பாளர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமாகக் கலந்து கொண்டனர். முனைவர்ஆ.இரா.பாரதராஜா வரவேற்புரையும் பேரா.D.சரவணன் நன்றியுரையும் வழங்கினர். செல்விR.I.ஐஸ்வர்யா l.B.Com தன்னம்பிக்கைப் பாடலை இசையோடு பாடி மகிழ்வித்தார். போட்டிகளில் வென்ற N.S.S.மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. N.S.Sமாணவிகள் அ.அனுப்பிரியா, ரித்திராஜ் தொகுப்புரை வழங்கினர். விழா இனிதே நிறைவுற்றது. நன்றி !
முனைவர் ஆ.இரா. பாரதராஜா
(NSS நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.)